இன்றும் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்!

Date:

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச...

சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது...

தபால் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு!

தபால் கட்டணத் திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகிறது. பல்வேறு பிரிவுகளின்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...