நாட்டில் பரவிவரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக,அரசாங்கம் வழங்கிய ஆலோசனைக்கமைய, வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகை வழங்காவிட்டால், அது குறித்த முறைப்பாடுகளை அளிக்க இலங்கை மத்திய வங்கி விசேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, 011 – 24 77 966 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளது.