பொது ஜன பெரமுனவிற்கு கம்மன்பில இன்று பதில்!

Date:

பொது மக்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள காலப்பகுதியில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளது.

அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன்சார்ந்த அரசாங்கமானது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தவறியுள்ளதன் மூலம் அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததன் மூலம், இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு மற்றுமொரு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடாது எனவும் இந்த நிலைமை மாற வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இதற்கு நேரடி பொறுப்புக்கூற வேண்டும் எனவும், இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தியமைக்கான முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் வினவியபோது, இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்து அதற்கான பதில் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...