அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை அவசியமானது – நியாயப்படுத்தி ஜனாதிபதி ஊடக அறிக்கை

Date:

எரிபொருள் விலைஅதிகரிப்பு அவசியமானது,ஏனைய சமூக பொருளாதார நன்மையளிக்கும் இலக்குகளை அடைவதற்கு இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொதுவான தந்திரோபாயத்தின் ஒரு அம்சமே விலை அதிகரிப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் வங்கி முறையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது,குறைந்த வட்டிவீதத்தை பேணுவதை. வெளிநாட்டு நாணயத்தை செலவிடுவதை குறைப்பதை நோக்கமாக கொண்டது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இது மக்களின் சுகாதாரம் நலன்புரி ஆகியவற்றை பாதுகாப்பதற்கான தீர்மானம் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு இறக்குமதியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை, முதலீட்டை அடிப்படையாக கொண்ட, நுகர்வோர் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட ,அல்லது உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமாக மாற்றும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது இந்த தீர்மானம் எனவும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான பல காரணங்கள் குறித்து ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பது இதற்கான ஒரு காரணம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த அதிகரிப்பு தொடரும் என்பதை சந்தை போக்குகள் புலப்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள்களிற்காக பெருமளவு அந்நிய செலாவணியை செலவிடும் நாடாக இலங்கை காணப்படுகின்றது மேலும் பல சேவைகள் இந்த இறக்குமதியை அடிப்படையாக வைத்து இயங்குகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...