“ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” இஸ்ரேலின் புதிய யூத பிரதமர்

Date:

யூத தேசத்தின் 13 வது பிரதமராக Naftali Bennett நேற்று 13.06.2021 இல் பதவியேற்றுள்ளார். 120 ஆசனங்களைக்கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் 60 உறுப்பினர்கள் Naftali Bennett க்கு ஆதரவாகவும், 59 உறுப்பினர்கள் அவரை எதிர்த்தும் வாக்களித்ததுடன், ஒரு முஸ்லிம் உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஏழு ஆசனங்களைக்கொண்ட ஒரு சிறிய கட்சியின் தலைவரான Naftali Bennett அவர்கள் பிரதமராக பதவியேற்ற நிலையில், பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக்கொண்ட பெஞ்சமின் நெத்தன்யாகு தனது பன்னிரெண்டு வருடகால ஆட்சியை இழந்தது ஓர் ஆச்சர்யமான விடயமாகும்.

கடும்போக்குவாத இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பெற்றியுள்ள புதிய பிரதமர் தனது கொள்கையுரையில், “ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்று முழங்கியுள்ளார்.

இஸ்லாமிய உலகை பொறுத்தவரையில், ஆக்கிரமிப்பு தேசமான இஸ்ரேலில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகம்மத் இக்பால் (LNN)

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...