பிரான்ஸ் அதிபரை தாக்கியவர் வாக்கு மூலம்!

Date:

பிரான்ஸ் நாட்டின்அதிபர் கொரோனா பிரச்சினைக்கு தீர்வுகண்ட பின்னர் மக்களுடனான பிரச்சினைகளை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இதன் போது நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார்.

அதில் வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு நடந்து சென்ற போது அந்நாட்டின் பிரஜை ஒருவர், அதிபர் மக்ரோங்கின் கன்னத்தில் அறைகிறார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் நடுவில் புகுந்து அதிபரை பின்னே இழுத்து தூர அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, “மக்ரோங் ஒழிக” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் அதிபரை அறைந்த காரணத்தை விளக்கியுள்ளனர்.

அதிபர் பின் பற்றும் நட்டின் பொருளாதார கொள்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மக்கள் கஷ்டங்களை எதிர் நோக்குவதாகவும், இதனால் தான் அதிபரின் கன்னத்தில் அறைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...