எங்கள் கட்சிக்குள் நெருக்கடி நிலவுவதாக ஊடகங்கள் கதைகளை உருவாக்கியுள்ளன-சரத் பொன்சேகா!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி பற்றி சில ஊடகங்கள் கதைகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எங்கள் கட்சிக்குள் ஒரு நெருக்கடி நிலவுவதாகவும், கட்சித் தலைவரை ஆதரிக்காத ஒரு தரப்பும் கட்சிக்குள் செயற்படுவதாக என்றும் வதந்திகள் வந்தன.சம்பிக்க ரணவக்க எங்கள் கட்சியில் பங்குதாரராக இருக்கிறார். அவர் கட்சியை விட்டு செயற்படுவதாக கதைகள் வெளிவந்தன.அவை அனைத்தும் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட கதைகளாகும் என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள.கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் சமீபத்தில் பிரேரனை மூலம் சுட்டிக்காட்டினோம், சம்பிக்க ரணவக்கவும் பிரேரனையை ஆதரித்தார்.பிரேரனை மூலம் எல்லோரும் கட்சித் தலைவருடன் இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. நாங்கள் கட்சியுடன் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம். பலர் கதைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எங்களுக்கிடையில் எந்த நெருக்கடியும் இல்லை. சம்பிக்க ரணவக்கவிற்கு கட்சியில் ஓர் பதவி நிலை வழங்குவது குறித்து இன்றும் நாங்கள் கலந்துரையாடினோம்.

நாங்கள் இன்று சந்தித்து பல விடயங்கள் குறித்தும் நாட்டின் நிலைமை பற்றியும் விவாதித்து ஒரு பெரிய நெருக்கடியைப் பற்றி விவாதித்தோம். உர நெருக்கடி குறித்து நாங்கள் நீண்ட விவாதம் நடத்தினோம். அரசாங்கத்தின் மாற்றீடு இல்லாமல் ஒரு தலைபட்சமாக செயற்பட்டமையால் அவதிப்படும் விவசாயிகள் குறித்து சிந்தித்ததோடு,அவர்களின் உருமைகளுக்காக நாங்கள் மக்களுடன் நிற்போம்.விவசாயிகள் உதவியற்றவர்களாக இருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இரண்டாவதாக கொரோனா தொற்றுநோய் குறித்தும் அரசாங்கத்தைப் பற்றியும் விவாதித்தோம்.கொரோனாவால் மக்கள் அதிர்ச்சியில் வாழ்கின்றனர். அரசாங்கத்தின் கட்டுப்படுத்தல் தோல்வி காரணமாக ஏராளமான நோயாளிகள் இன்று பரவலாக நாடு முழுவதும் காணப்படுகிறார்கள், மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாங்கள் அரசியல் ஆதாயத்தைப் பெறாத வன்னம் எதிர்க்கட்சியாக எமது பங்களிப்பை முறையாக மேற்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...