உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கைச்சாத்து

Date:

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கைச்சாத்திட்டனர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், எரிபொருள் விலையை அதிகரிக்க வலுசக்தி அமைச்சர், அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவில்லை என அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சர் உதய கம்மன்பில, அடிப்படை பொறுப்புக்களை மீறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மிக அதிகளவில் குறைவடைந்திருந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம், இதுவரை எரிபொருளின் விலையை குறைக்காது, அதிகளவிலேயே வைத்திருந்ததுடன், அதனால் பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபத்தை பாராளுமன்றத்திற்கும், மக்களுக்கும் தெளிவூட்டவில்லை எனவும் நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை உள்ளிட்ட 10 விடயங்களை மேற்கோள்காட்டி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

Popular

More like this
Related

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...