ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது பெயர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேய இவ்வாறு கூறியுள்ளார்.