பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு போக்குவரத்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

Date:

எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில், பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெழுனு விஜேரத்ன, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவான பயணிகளுக்கான கட்டணத்தை தாங்கள் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றம் உட்பட ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் எமது நிலைப்பாட்டை விளக்கப்படுத்தி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இது தொடர்பில், அமைச்சர்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினருடன், அனைத்து சங்கங்களும் இணைந்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக கெழுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம்,

 

பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கத்தினருடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்படப்போகும் நட்டம் குறித்து அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

எவ்வாறிருப்பினும் சம்பந்தப்பட்ட சங்கங்கள் கட்டண அதிகரிப்பை மாத்திரம் தீர்வாக கருதவில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன. எனினும் அவ்வாறு இடம்பெறாவிட்டால் அவர்களுக்கு பெரும் நட்டம் ஏற்படும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

 

இந்நிலையில், பேருந்து கட்டணங்களை அதிகரிக்காமல், அவர்களுக்கு ஏதேனும் நிவாரணங்களை வழங்குவது குறித்து அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...