கொலைக் குற்றவாளியான துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து அரசை வன்மையாக கண்டித்த சுமன பிரேமச்சந்திர

Date:

கொலை குற்றவாளியான துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் பிரகாரம் விடுவித்தமைக்காக அரசாங்கத்தின் முடிவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி வன்மையாக கண்டித்துள்ளார்.

கொலை குற்றத்துக்காக 2016 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில்வா, இன்ற ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பில் சுமன பிரேமச்சந்திர தெரிவிக்கையில், “கொலையாளி வெளியே. நீதியை மதிக்காத நாட்டின் மீது சூரியன் ஒரு போதும் பிரகாசிக்காது”

மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளை புறக்கணிப்பதன் மூலம், நீதித்துறையை மதிக்காத நாடாக இலங்கை மாறியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இலங்கையில் அனுசரிக்கப்படும் சிறப்பு பெளத்த பண்டிகையான பொசொன் போயாவின் புனித நாளில் இந்த அநீதி ஏற்பட்டுள்ளது என்றும் சுமன பிரேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...