ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிண்ணத்தை சுவீகரித்த முல்தான் சுல்தான் அணி!

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக 2021 சீசன் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது.

பயோ-பபுள் தோல்வியடைந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்து கடந்த 9ஆம் திகதி இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் முஹம்மத் ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ், வஹாப் ரியாஸ் தலைமையிலான பெஷாவர் சல்மி அணிகள் களமிறங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெஷாவர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களை குவித்தது. ஷொய்ப் மக்சூத் 35 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அதிரடியாக ஆடிய ரசோவ் 21 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 50 ரன்களை குவித்திருந்தார்.

பெஷாவர் அணி சார்பில் சமீன் குல், மொகமது இம்ரான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 207 என்ற ஓட்ட இலக்கை அடைய வெற்றி இலக்குடன் பெஷாவர் அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பெஷாவர் அணி 9 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.

பெஷாவர் அணியில் அதிகபட்சமாக ஷொய்ப் மாலிக் 48 ஓட்டங்கள், கம்ரான் அக்மல் 36 ஓட்டங்கள், ரோவான் பாவெல் 23 ஓட்டங்களை குவிந்திருந்தனர்.

முல்தான் அணி சார்பில் தாஹிர் 3 விக்கெட் இம்ரான் கான், முசாராபானி தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர் என்பது சிறப்பம்சமாகும்.

இதன்மூலம் முல்தான் சுல்தான் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் சாம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது. ஷொய்ப் மக்சூத் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...