குருநாகல் – கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு சட்டவிரோதமாக உள்நுழைந்து ஓட்டப்பந்தயம் நடத்திய போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு ஏழு மணியளவில் குறித்த இரண்டு வாகனங்களும் இந்த பாதையின் ஊடாக குருநாகல் நோக்கிப் பயணித்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும், விபத்து இடம்பெறும் போது குறித்த காரில் 5 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்று பேரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நெடுஞ்சாலை இன்னும் போக்குவரத்துக்குத் திறக்கப்படாத நிலையில், சட்டவிரோதமான முறையில் அவர்கள் இந்தப் பாதை ஊடாக பயணித்துள்ளனர்.