இந்த நாட்டில் நடக்கும் தவறுகளுக்கு மூல காரணம் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே – மங்கள சமரவீர

Date:

1978 ஆம் ஆண்டில் இலங்கையில் உருவாக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே, அப்போதிலிருந்து தற்போதுவரை நாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு தீமைகளுக்கும் அடிப்படையாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.

மேலும்  இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே, அப்போதிலிருந்து தற்போதுவரை நாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு தீமைகளுக்கும் அடிப்படையாகும். சட்டத்தின் ஆட்சியை மையமாகக்கொண்டு செயற்படும் ஜனநாயக நாடாக இலங்கை இருக்க வேண்டுமானால், முதலில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தான் தெரிவாகி 6 மாதகாலத்துக்குள் எந்தப் பதவிக்காகப் போட்டியிடுகின்றாரோ அந்தப் பதவியை ஒழிப்பதாக வாக்குறுதியளிக்க வேண்டும்.

மேலும் இது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படாத பல விசேட நிபுணர்குழுவின் அறிக்கைகளின் ஊடாகவே நரகத்தை நோக்கிய இலங்கையின் பாதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறைமையை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியான ஏற்புடைமையே அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...