பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்த தாய்!

Date:

தும்மலசூரிய, மரக்களமுல்ல பிரதேசத்தில் பிறந்த குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய தும்மலசூரிய பொலிஸாரினால் குறித்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் வழங்கிய நபர், தாய் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்து வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நியைில், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இன்று மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் குழந்தையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொண்டு குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் அறிக்கை இடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தும்மலசூரிய பொலிஸாரினால் குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளார்.தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...