தென்னிந்திய பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக தற்போது இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்பான பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது, சற்று நேரத்திற்கு முன்பு லங்கா எக்ஸ்பிரஸ் செய்தி இதனை உறுதிப்படுத்தியது.
கொழும்பின் தெற்கில் 5.2 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டது எனினும் மாலைத்தீவுக்கு இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மாலைத்தீவு வானிலை ஆய்வு மையம் கூறுயுள்ளது.