தோல்விப்பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதலிடம்!

Date:

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி அடைந்த நிலையில், அதிகப்படியான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோல்வியடைந்த சர்வதேச அணியாக இலங்கை பதிவாகியுள்ளது.

 

1975 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகள் இடம்பெறுகின்றன.இலங்கை அணி இதுவரையில் 860 போட்டிகளில் விளையாடியுள்ளது.அவற்றில் 428 போட்டிகளில் இலங்கை தோல்வி அடைந்துள்ளது.

இலங்கைக்கு அடுத்தபடியாக இந்தியா 427 போட்டிகளில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.பாகிஸ்தான் 414 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

அதேநேரம் இலங்கை அணி கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் விளையாடிய 62 சதவீதமான ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கையின் ஒருநாள் போட்டிகளின் வெற்றித்தோல்வி விகிதம் 0.911 ஆக உள்ளது.இதில் தென்னாபிரிக்கா முதல் இடத்தில் இருப்பதுடன், அதன் வெற்றித்தோல்வி விகிதம் 1.77 ஆகும்.

Popular

More like this
Related

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...