மட்டக்களப்பு மாவட்டம் ஒட்டமாவடியில் நேற்று (14) நிலவரப்படி மொத்தம் 1001 கொவிட் தொற்றால் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
946 முஸ்லிம்கள், 24 இந்துக்கள், 16 கிறிஸ்தவர்கள், மற்றும் 15 பெளத்தர்கள் கொவிட்டினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. அலி ஜாஹிர் மெளலானா தெரிவித்தார்.
முஸ்லீம் சமூகம் மற்றும் எதிர்க்கட்சியின் கடுமையான முயற்சிக்குப் பிறகு, கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களை ஓட்டமாவடி, மட்டக்களப்பு இடத்தில் அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இரனைதீவிலே அடக்கம் செய்ய முதலில் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் குடியிருப்பாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு ரத்து செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள இரக்காமம் பகுதி, கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு இடமாக உள்ளது.
இருப்பினும், இன்றுவரை ஓட்டமாவடி புதைகுழியில் மட்டுமே அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.