ஆப்கானிஸ்தான் ‘ஜனாதிபதி மாளிகை’ அருகே தாக்குதல்

Date:

ஆப்கானிஸ்தானில் பக்ரித் தொழுகையின் போது ‘ஜனாதிபதி மாளிகை’ அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பக்ரீத் தொழுகையின் போது ஜனாதிபதி மாளிகை அருகே மூன்று ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்த உறுதியாக தகவல் எதுவும் வெளியாவில்லை. ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி மாளிகை அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
“இன்று ஆப்கானிஸ்தானின் எதிரிகள் காபூல் நகரின் பல்வேறு பகுதிகளில் ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். அனைத்து ராக்கெட்டுகளும் மூன்று வெவ்வேறு பகுதிகளைத் தாக்கின. எங்கள் ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், எங்களுக்கு எந்த உயிர் சேதமும் இல்லை. எங்கள் குழு விசாரித்து வருகிறது” என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மிர்வாஸ் ஸ்டானிக்ஸாய் கூறினார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...