உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோல்வி!

Date:

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் நேற்றும், இன்றும் இடம்பெற்றது.

 

பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திருத்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

 

இதனையடுத்து, இன்று மாலை 5.40 மணியளவில், குறித்த அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஆரம்பமானது.

 

இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 152 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், பிரேரணைக்கு எதிராக 61 வாக்குகள் அளிக்கப்பட்டன.

 

அதற்கமைய, உதயகம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...