ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றில் ஆஜரானார்கள்

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூன்று பேர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (23) பிற்பகல் இவர்கள் மூவரும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று (24) கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

16 வயதுடைய சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் தந்தை மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் இதற்கு முன்னர் பணி புரிந்து வந்த பணிப்பெண் ஒருவரும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்திருந்தது.

அதன்படி, ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...