இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி!

Date:

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் குல்திப் யாதவ் 23 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 16 ஓட்டங்களையும் அதிகப்படியாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 04 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 82 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ராகுல் சஹர் 04 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

Popular

More like this
Related

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...