களுபோவில மருத்துவமனையில் இட நெருக்கடி | நோயாளர்கள் வெளியில் உறங்கும் நிலை!

Date:

களுபோவில மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி (Thilakshani Maduwanthi) தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

தனது தாயார் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக நீண்ட வரிசையில் இருந்ததாகவும், வரிசையில் காத்திருந்த போது இருவர் கண்முன்னே இறந்துவிட்டதாகவும், சிலர் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவைப் பற்றி நான் சொன்ன செய்திகளை இப்போது என் கண்களால் பார்க்கிறேன்.

இன்று அதிகாலை 1:20 மணியளவில் களுபோவில மருத்துவமனையின் கொரோனா வார்ட்டின் நிலைதான் இது, வார்டில் ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள்.
அவர்கள் தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள்.

வார்டில் உள்ள படுக்கைகளின் கீழ், மற்றவர்கள் உயிருக்கு போராடி, ஒட்சிசனைப் பெறுகிறார்கள். தரையில் நோயாளிகள் நடக்க பயப்படுகிறார்கள்.

மீதமுள்ள அனைத்து (நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்) நீண்ட இருக்கைகளிலும் bench, நாற்காலிகள், மரங்களின் கீழ் படுத்திருக்கிறார்கள்.

மணல் தரையில் ஒரு போர்வையுடனும் அதுவும் இல்லாமல் படுத்துள்ளதை காணமுடிகின்றது.

குளிரிலும் நுளம்பு கடியிலும், இந்த மக்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

மருத்துவமனையில் ஊழியர்கள் குறைவாகவே உள்ளனர். அவர்கள் ஒரு தெய்வத்தைப் போல கடினமாக நோயாளர்களுடன் போராடுகின்றனர்.

என் அம்மா இதுபோன்று கொரோனாவுடன் போராடிக்கொண்டிருந்தபோது, என் தந்தை ஒரு ஒட்சிசிசன் இயந்திரத்திற்கு காத்திருந்தார்.

இந்த வாழ்க்கையில் பெரிய சந்தோசம் இல்லை. மேலும் உதவியற்ற நிலை இல்லை. நாளை எனக்கும் தொற்று ஏற்படும்.

நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். கொரோனாவை குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்களால் முடிந்தவரை கவனமாக இருங்கள். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவைப் பற்றி நான் சொன்ன செய்திகளை இன்று நான் என் கண்களால் பார்க்கிறேன். கவனமாக இருங்கள் .. மிகவும் கவனமாக இருங்கள்..

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...