பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலையை அறிவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்
தற்போது 9,950 ரூபா தொடக்கம் 50,000 ரூபா வரை
நாட்டில் பல பகுதிகளில் பல்வேறு முறையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அறவிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இதனால் பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைக்கு அறிவிடக்கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து
அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையினூடாக அடுத்த வாரமளவில் இந்த விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இவ்வாறு சுட்டிக்காட்டினார்.