எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் தலைவராக இன்று எம். பி .எம் அஷ்ரப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மையம் 35 ஏக்கர் பரப்பளவில் 300 இளைஞர் தலைவர்களுக்கு ஒரே நேரத்தில் குடியிருப்பு வசதிகளுடன் கொண்ட ஒரு முழுமையான தலைமைத்துவ பயிற்சி மையமாக விளங்குகிறது. இதில் வருடத்திற்கு 5000 – 15000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இந்த மையம் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.