கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

Date:

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளைய தினம் 9 மணிநேர நீரிவிநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை முற்பகல் 9 மணிமுதல் மாலை 6 மணிவரையில் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒருகொடவத்த – அம்பத்தல வீதியில் முன்னெடுக்கப்படுகின்ற

திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...