கொவிட் தொற்றாளர்களை வீடுகளிலிலேயே சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Date:

கொவிட் தொற்றாளர்களை வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ், வீட்டிலேயே பாதுகாக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் தற்போது இடம்பெறுகிறது.

இந்த வேலைத்திட்டம் அண்மையில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (14) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதேச சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கொவிட் தொற்றாளர்கள் வீடுகளில் சிகிச்சையளிப்பதற்காக பதிவு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகொள்வதற்காக மாத்திரம் 1390 என்ற துரித தொலை பேசி இலக்கம் 24 மணிநேரமும் செயல்படும் .நோயாளி வீட்டில் சிகிச்சை பெறுகிறார் என்றால், அவர் / அவள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.எவ்வாறாயினும், சிக்கல்களை கொண்டுள்ள மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள அனைத்து கொவிட் நோயாளிகள் வழக்கம் போல் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச்செல்ல பரிந்துரைக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதுடன், வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றாளர்களை வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ், வீட்டிலேயே பாதுகாக்கும் இந்த வேலைத்திட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வைத்தியர்களை உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான பயிற்சிகளும் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இரண்டு தொடக்கம் 65 வயதிற்கு உட்பட்ட நோய் அறிகுறிகள் குறைந்தவர்கள் இவ்வாறு வீடுகளில் வைத்து பாதுகாக்கப்படுவார்கள்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...