பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்வதை தவிர்க்கவும் – காவல்துறை கோரிக்கை!

Date:

அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதை தவிர்க்குமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.நாளை முதல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் பல சேவையாளர்கள் அவர்களது பணிகளுக்கு கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு பிரவேசிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாளை முதல் (22) அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும்  நிறுவனங்களின் பல சேவையாளர்கள்  அவர்களது பணிகளுக்கு  கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு பிரவேசிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நிறுவனங்களினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தினை சேவையாளர்கள் பணிக்கு செல்லும் தினத்தில் மாத்திரம் பாவனைக்குட்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய தேவையில்லாமல் வெளிச்செல்வது பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்தநாட்கள் மிகுந்த அவதானத்துடன் கூடியதாகும்.

எனவே அவர்களையும் கருத்திற்கொண்டு அனைவரும் செயற்பட வேண்டியது கட்டாயமானதாகும்.நாட்டின் சகல பிரஜைகளும் தங்களினதும், தமது குடும்பத்தினரினதும் நன்மைக்கருதி அத்தியாவசிய தேவையின்றி வெளிச்செல்லாது வீட்டிலேயே இருக்குமாறு மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...