முதியோர்களின் வீடு தேடிச் சென்று கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு!

Date:

எப்.முபாரக்  

திருகோணமலை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் திரு.சீ.அருள்செல்வம் அவர்களின் அறிவுருத்தலுக்கு அமைவாக மூதூர் தபாலகத்தில் முதியோர் கொடுப்பனவுகளைப் பெறும் பயனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தபால் அதிகாரிகளினால் இன்று(29) கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக உரிய கொடுப்பணவுகளை மூதூர் தபாலகத்தின் உதவித் தபால் அதிபர் எம்.எம்.றிசாட் மற்றும் காரியாலய உதவியாளரின் மூலமும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று  கையளிக்கப்பட்டுள்ளது.

வாழ்வியல் நெருக்கடியான இக்காலகட்டத்தில் இவ்வாறான முதியோர் கொடுப்பணவுகள் வீடு, வீடாகச் சென்று கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்கு பயனாளிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகருக்கு தங்களது மனப்பூர்மான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...