20 – 29 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்

Date:

தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில், இதன்போது தீர்க்கமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், 20 – 29 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை, எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள் முன்னெடுப்பதற்கான தேவை தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் மேற்கொள்ளப்படும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவிய சுகாதார, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும், ஜனாதிபதி அவர்கள் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மருத்துவ அங்கீகாரம் கிடைத்தவுடனேயே, பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி ஏற்ற முடியுமென்றும், ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாளாந்தம், 400 – 450க்கு இடைப்பட்ட தடுப்பூசி நிலையங்களில், தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுகாதாரத் துறையினரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, தடுப்பூசி நிலையங்களுக்கான தடுப்பூசித் தொகை தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக முன்னெடுக்கப்படும் தடுப்பூசி ஏற்றல் பணிகளைப் புறந்தள்ளிவிட்டு, ஓரிரு தடுப்பூசி நிலையங்களில் இடம்பெறும் சில சம்பவங்களைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு ஊடகங்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் கவலைக்குரியனவாக உள்ளனவென்று, மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

தடுப்பூசி ஏற்றலின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியுடன், புதிய பொதுமைப்படுத்தல் முறைமைக்கு ஏற்ப, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வதன் அவசியம் பற்றி, ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

2020ஆம் ஆண்டில் சுமார் 03 மாதங்களாக நாடு முழுமையாக மூடப்பட்டிருந்ததால், வரலாற்றில் முதன் முறையாக, நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை நிலைமைக்குத் தள்ளப்பட்டது. சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு எனும் யதார்த்தத்தைப் புரிந்து, பொருளாதாரத்தைப் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல, அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றும், ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் வெற்றியுடன், ஏற்றுமதித் துறையில் ஈடுபடும் தொழிற்சாலைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடிந்தமையானது, பொருளாதாரத்துக்குக் கிடைத்த பெரிய ஆறுதலாக உள்ளதென்று, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

உலகின் பல நாடுகள், சுற்றுலாத் துறைக்காகத் தமது நாடுகளைத் திறந்துகொண்டிருக்கின்றன. அவ்வாறானதொரு தீர்மானத்தைத் தாமும் எடுப்பதன் மூலம், சிறந்த பயன்களை அடைய முடியுமென்று, ஜனாதிபதி அவர்கள் இதன்போது எடுத்துரைத்தார்.  கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்குச் சமாந்திரமாக, சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்களை உடனடியாக முன்வைக்குமாறு, சுகாதாரத்துறை முக்கியஸ்தர்களுக்கு, ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாரச்சி, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, ரமேஷ் பதிரண, நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதாரச் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன ஆகியோரும், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், கொவிட் ஒழிப்பு விசேட செயலணியின் உறுப்பினர்கள், மாகாணச் சுகாதாரணப் பணிப்பாளர்கள் ஆகியோரும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...