நிலக்கண்ணி வெடிகளைத் தடை செய்யும் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்!

Date:

1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற ஆட்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைத் தடை செய்தல் தொடர்பான இராஜதந்திர மாநாட்டில், ஆட்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பாவனை செய்தல், இருப்பில் வைத்திருத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்றவற்றை தடை செய்தல் மற்றும் அவற்றை அழித்தல் தொடர்பான சமவாயத்தின் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையில் குறித்த உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டத்தை வகுப்பதற்கான பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு. அதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...