இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்புவரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்புவரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

 

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...

குழந்தைகளின் அனுமதி பெறாமல் தொடுவது தவறானது: ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ குறித்து மருத்துவர் துஷாரா விக்கிரமநாயக வலியுறுத்தல்!

குழந்தைகளுடனான உடல்தொடர்பு குறித்த உரையாடல்களில் அவர்களின் சம்மதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட...

அமெரிக்கா – ஈரான் போர் குழப்பங்களுக்கு மத்தியில் அச்சுறுத்தும் ஐசனஹோவரின் 60 ஆண்டுக்கால எச்சரிக்கை!

அமெரிக்க இராணுவச் செயலாளர் டேனியல் டிரிஸ்கோல் (Dan Driscoll) எதிர்பாராத விதமாகப்...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது!

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான...