கூகுளின் 23 ஆவது பிறந்த நாள் இன்று

Date:

உலகின் பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்குரிய கணினி தேடுதல் பொறி, அதாவது Search Engine ஆக இருக்கும் கூகுள் இன்று தனது 23 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

அதை அடையாளப்படுத்தும் விதமாக தனது இணையதள பக்கத்தில் பிரத்யேக டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் 23 ஆவது வயதை குறிக்கும் வகையிலான பிறந்த நாள் கேக்கின் படமும் எல் வடிவிலான மெழுகுவர்த்தியும் இடம் பெற்றுள்ளன.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதியே கூகுள் தேடு பொறி நிறுவப்பட்டு விட்டது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு அதுவே கூகுளின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்பட்டது.

அதன்பின்னர் கூகுளின் தேடுதல் பக்கங்களின் எண்ணிக்கை சாதனை அளவாக அதிகரித்ததை குறிக்கும் வகையில் செப்டம்பர் 27 ஆம் திகதி கூகுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...