கொவிட் தொற்றால் மேலும் 43 பேர் பலி!

Date:

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (05) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,185 ஆக அதிகரித்துள்ளது.இதன்படி ஒக்டோபர் 05 உயிரிழந்தவர்களில் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 05 ஆண்களும் 02 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 18 ஆண்களும் 18 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 36 பேர் ஒக்டோபர் 05 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, நாட்டில் மேலும் 582 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 522,584 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 478,326 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...