பால் மா, சமையல் எரிவாயு, சீமெந்து ஆகிய பொருட்களின் புதிய விலை குறித்த தீர்மானம் இன்று

Date:

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து அவற்றுக்கான புதிய விலைகள் இன்று (08) தீர்மானிக்கப்படவுள்ளது.

பால் மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்க நேற்று தீர்மானிக்கப்பட்டது.

நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும், தேவையற்ற அதிக விலை உயர்வுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது குறித்து இன்றைய தினம் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

பேராயர் டொன் விமலசிறி ஜயசூரியவின் வருகையை முன்னிட்டு விசுத்தாராம விகாரையில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்!

சிலாபம் மறைமாவட்டப் பேராயராகப் புதிதாகக் கடமையேற்றுள்ள கௌரவத்திற்குரிய டொன் விமலசிறி ஜயசூரிய...

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த...

அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி...