முஹம்மத் நபி பெருமானரைப் பற்றி மறக்க முடியாத கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது எமது மனமும் ஆன்மாவும் தூய்மையடைகிறது. புத்துயிர் பெறுகிறது.
இறைவன், மதம், மார்க்கம் பற்றியெல்லாம் சொல்வதற்குப் பல இறைத்தூதர்கள் இப்பூமியில் பாடுபட்டுள்ளார்கள். முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் தனித்துவம் வாய்ந்த ஒரு புனிதர். “Man Of The Men” என்று இவரைச் சொல்லலாம்.
அந்த மாமனிதரின் எண்ணம், பேச்சு, செயல் அனைத்துமே நம்மை மாற்றக்கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்தது என்று அடித்துச் சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்துமே வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால் நபியவர்களின் காலத்தில் அறிவியல், தொழில்நுட்பங்கள் எதுவும் இருக்கவில்லை.அச்சூழ்நிலையில் அருட்பெரும் மார்க்கத்தை, சமுதாயத்தை உருவாக்க நபிகளார் எவ்வளவு பாடுபட்டிருப்பார் என யோசித்துப் பாருங்கள்.
இறைத்தூதராக மக்களிடம் நம்பிக்கையை வளர்த்து அதனை பக்தியாக மாற்றி நல்ல சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறார் என்றால் அவர் ஒரு சிறந்த மார்க்கவாதி மட்டுமல்ல மக்கள்வாதி, சாதனையாளர், புரட்சியாளர். ஒருவர் இருந்தார். செய்தார், சென்றார் என்று மட்டும் சொல்ல முடியாதபடி அவர். வாழ்த்ததிற்கான வரலாறும், பதிவுகளும் இன்று வளர இருக்கத்தான் செய்கிறது.
மக்களுக்காக வாழ்ந்தவர் எவரும் மக்களின் மனங்களிலிருந்து மறக்கப் படமாட்டார்.என்பதற்குச் சிறந்த உதாரணம் நபியவர்கள் தான்,தம்முடைய வாழ்வையே எளிமையாக, பக்திப் பூர்வமாக, ஒழுக்கத்துடனும் விழிப்பு உணர்வுடனும் வாழ்வதற்கு இப்படியாக பல எண்ணற்ற விஷயங்களுக்கு முன்னுதாரணமான நாயகராகத் திகழ்பவர் நபிகளார் அவர்கள்.இந்தக் காலகட்டத்தில் எத்தனையோ போவித்தனமான நபர்களையே நமக்கு முன்னு தாரணமாகப் பின்பற்றி நம்முடைய வாழ்வின் தனித்துவத்தை இழந்து நிற்கிறோம், இத்தகைய குழப்பமான நிலையில் இவரைப் போல் புனிதமான, உள்ளதமான ஒருவரைப் பின்பற்றி நாம் ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்வில் உயர வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் மதவாதியாக அல்லாமல், மனிதநேயம் கொண்ட மிகச் சிறந்த மனிதராக வாழ்வதற்கு நபியவர்களின் வாழ்க்கை வரலாறு நம் அனைவருக்கும் மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.