உற்பத்தி செலவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், முட்டை விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது 22 ரூபாவிற்கு முட்டை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அந்த விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.