பெரும்போக வேளாண்மை செய்கைக்கு தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே .ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஐந்து இலட்சம் லீற்றர் நனோ நைதரசன் உரம் எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்கு தருவிக்ப்படும் தரமற்ற உரத்தையோ , கிருமிநாசினியையோ விவசாயிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விநியோகிக்கப்பட மாட்டாது என கே .ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.