ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) ஸ்கொட்லாந்து பயணமானார்.ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து – க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள ” Cop: 26 ” ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணமாகியுள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கு எவ்வாறு முகம்கொடுத்து செயற்படுவது தொடர்பாக நாடுகள் திட்டமிடும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நாளை (31) தொடக்கம் நவம்பர் 12 வரை க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது.எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதிகள் உலகத் தலைவர்களின் மாநாட்டுக்கான தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தினை தீர்மானிக்கும் சந்தர்ப்பங்கள் என்று நடைபெறுகின்ற இம் மாநாட்டில் 197 நாடுகளின் அரசத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 25,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.