கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பதுளை – லுனுகலை வீதி பசறையில் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த போது தீடீரென சுகயீனம் அடைந்துள்ளார்.அதன் பின்னர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைகளுக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.கொவிட் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாததல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பசறை விபத்தில் 14 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.