T20 Highlights: 45 ஓட்டங்களால் நமீபியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்; அரையிறுதிக்கு தகுதி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் ‘சூப்பர் 12″ இன் 31 வது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதின.இன்றைய போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.இப் போோ்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் பாபர் அசாம் 70(49), ஆட்டமிழக்காமல் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் 79 (50) , முஹம்மத் ஹபீஸ் 32(16) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

நமீபியா அணியின் பந்துவீச்சில் ஜன் மற்றும் பிரய்லின்க் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

190 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

நமீபியா அணியின் துடுப்பாட்டத்தில் டேவிட் வய்ஸஸ் 43 ,கிரெய்க் வில்லியம்ஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இமாத் வஸீம் , ஹசன் அலி, ஹரீஸ் ரொவ்ப், சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் தெரிவானார்.

இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி இத் தொடரின் நான்காவது வெற்றியை நிலை நாட்டியுள்ளதோடு அதிக ரன்ரேட்டில் குழு 2 இல் முதலாவது அரையிறுதிக்கு செல்லும் அணியாக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...