அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்த கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு

Date:

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று (03)கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பெற்றார்களால் இடம் பெற்றது. குறித்த கவனயீர்ப்பில் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பினை முன்னெடுத்தனர் .

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு, மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்து, கல்வி கற்பதற்கான உரிமைகளை உறுதிப்படுத்து, கல்வி ஊடாக தேசிய உற்பத்திக்கு ஆறு வீதம் ஒதுக்கு, தொற்று நோய் காரணமாக முடக்கப்பட்ட கல்வியை கட்டியெழுப்பு போன்ற வசனங்களை உள்ளடக்கிய வகையில் பெற்றார்கள் இக் கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள். அமைதியான முறையில் சுமார் பத்து நிமிடங்கள் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டு வந்ததுடன் அங்கிருந்து அதன் பின் கலைந்து சென்றனர்.

ஹஸ்பர் ஏ ஹலீம்_

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...