ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார்.
முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ரீஷ் ஷம்சியை பின்தள்ளி அவர் முதல் இடத்தை தனதாக்கியுள்ளார்.
அத்தோடு சகலதுறை போட்டியாளர்கள் வரிசையிலும் அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.