எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பதை நிதி அமைச்சர் தீர்மானிப்பார்- உதய கம்மன்பில!

Date:

எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பதை  நிதி அமைச்சர் தீர்மானிப்பார் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் தற்போது பெரும் நெருக்கடியில் இருப்பதால் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதை போன்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக எரிபொருள் விலை அதிகரிக்கப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு இருந்தபோதிலும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கே இருக்கிறது என்றார்.அத்தோடு தற்காலத்தில் விவசாயம் செய்யும் மக்கள் மற்றும் மீன்பிடி துறையினர் இல்லாத பகுதிகளுக்கு மண்ணென்னெய் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...