இன்றைய வானிலை நிலவரம் | 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Date:

வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, புத்தளம் – நீர்கொழும்பு பிரதான வீதியின் மாரவில பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் அந்த பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (10) பிற்பகல் வரை நீடிக்கின்றது.

அதற்கமைய, பதுளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, குருணாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...