” எமது மக்கள் சக்தி” கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கட்சி உறுப்புரிமையிலிருந்தும் தேசப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன தேரரை நீக்குவதற்கு “எமது மக்கள் சக்தி” கட்சி தீர்மானித்துள்ளது எனவே இத் தீர்மானத்துக்கு எதிராகவே தேரரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.