நாட்டில் நேற்றைய தினம் (11) கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,950 ஆக உயர்வடைந்துள்ளது.
கொவிட் தொற்று உறுதியான 723 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 548,784 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.