ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டு. பலர் காயமடைந்தனர்.
நங்கர்ஹாரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று (12) வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். உடனடியாக காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இம் மாத தொடக்கத்தில் ஆப்கான் தலைநகர் காபூலிலுள்ள ராணுவ மருத்துவமனையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.