இன்று (15) காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ 7 மணி நேர வாக்கு மூலம் ஒன்றை வழங்கிய பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து சம்பந்தமாக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.