காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு பலப்பிட்டிய நகரில் காலி வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் சாரதி விபத்தின் பின்னர் தப்பியோடியுள்ளார். மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்தில் பலபிடிய வெலிதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் நிஜாம் மாஸ்டர் அவர்களே உயிரிழந்துள்ளார். அன்னாரது சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் PCR பெறுபேறு வரும்வரையில் வைக்கப்பட்டுள்ளது.